12 NOV 2024

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

ஊட்டச்சத்து

ஆப்பிளில் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதய ஆரோக்கியம்

ஆப்பிள் சாப்பிடுவது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

செரிமானம்

ஆப்பிள் பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை செரிமானத்திற்கு சிறந்த பலனை அளிக்கின்றன.

எடை

ஆப்பிள் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிக நேரம் பசி எடுக்காது. இதன் காரணமாக உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

நீரிழிவு

ஆப்பிள் பழங்களை சாப்பிடுவதன் மூலம் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூளை

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க