19 May 2024
உலர் பழங்களில் பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நம் உடலுக்கு தேவையான வைட்டமின், நார்ச்சத்து உள்ளன.
அதனால்தான் பலரும் தங்கள் டயட்டில் உலர் பழங்களை விரும்பி சேர்த்துக் கொள்கின்றனர். இவை நம் உடலுக்கு தேவையான சக்தியை தருவதோடு, செரிமானத்திற்கு நல்லது
உலர் பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
பலவகையான உலர் பழங்களை சாப்பிடும்போது நம் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.
உலர் பழங்களை ஜூஸாகவும் போட்டுக் குடிக்கலாம். திராட்சை, பாதாம், முந்திரி, வால்நட் போன்றவற்றை இரவில் உற வைக்கவும்
உறவைத்த உலர் பழங்களை காலையில் தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி அரைத்து குடிக்கலாம். வேண்டுமென்றால் ஒரு கப் பாலை சேர்த்துக் கொள்ளலாம்
டயட்டில் ,இருப்பவர்கள் பாலை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதனை உங்கள் காலை உணவாக கூட எடுத்துக் கொள்ளலாம்.