10 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
சமைத்து முடித்துவிட்டு முட்டை ஓடுகளை தூக்கிப்போடுவாம். ஆனால், இந்த முட்டை ஓடுகளை நாம் பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்
வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் அல்லது மாடி தோட்டம் வைத்திருந்தால் முட்டை ஓடுகளை அந்த செடிகளுக்கு உரமாக போடலாம்
முட்டை ஓட்டில் கால்சியம், ப்ரோட்டீன் உள்ளது. இதனை தூக்கி எறியாமல் மாவு பதத்தில் அரைத்து பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்
முட்டை ஓடுகளை சின்னதாக நறுக்கி பாத்திரம் விலக்கும் சோப்போடு சேர்த்து விலக்கினால் அடிபிடித்த கறைகள் நீங்கும்
நாய்க்கு கேல்சியம் சப்ளிமென்ட் கொடுப்பதற்கு பதில் முட்டை ஓடுகளை காயவைத்து அரைத்து நாய்கள் சாப்பிடும் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்
மிக்ஸி ஜார் பிளேடில் உள்ள சிறு கறைகளை அகற்றவும் முட்டை ஓடுகள் பயன்படுகிறது
முட்டை ஓடுகளை சிறிதாக மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு பாத்திரம் விலக்கும் லிக்விட் சேர்த்து அரைத்தால் ஜார் பளபளப்பாக இருக்கும்