ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

30 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வயதுக்கேற்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு என தெளிவான எல்லைகளை கட்டமைத்து கண்காணிக்க வேண்டும்

எல்லைகள்

குழந்தைகளிடம் இருக்கும் நல்ல பழக்கம் கண்டறியப்பட்டு அதனை ஊக்குவிக்க வேண்டும். நேர்மறையாக பேசுவது சுயமரியாதை அதிகரிக்கும் 

ஊக்குவித்தல்

இரக்கம், பொறுமை மற்றும் நேர்மை ஆகியவற்றை குழந்தை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நடங்கள்.

பொறுமை

விதிகளை மீறும் போது ஏற்படும் விளைவுகள் குறித்தும், பொறுப்புடன் செயல்படுவது குறித்தும் எடுத்துச் சொல்லவும். கடுமையான தண்டனைகளை தவிர்க்கவும் 

தண்டனைகள்

உங்கள் குழந்தைகளின் மனக்கவலைகளை கேட்பதன் மூலம் அவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். இது அவர்களின் அழுத்தத்தை குறைக்கும் 

இரக்கம்

வெளியில் சென்று நேரம் செலவிடுவது குழந்தைகள் தங்கள் இயல்பை வெளிக்காட்ட உதவுகிறது. இது அவர்களின் சுய கட்டுப்பாட்டை வளர்க்க உதவுகிறது 

சுய கட்டுப்பாடு

குழந்தைகள் பெற்றோர்களால் கட்டுப்படுத்தப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையானதை அவ்வப்போது செய்வதால்  மன நிறைவு அடைவார்கள்

மன நிறைவு