உலகத்தில் கருப்பு மணல் கொண்ட கடற்கரைகள் எங்கே இருக்கு தெரியுமா?

11 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

அங்குள்ள லோம்போக்கில் உள்ள செங்கிகி கடற்கரையில் கருப்பு நிற மணலில் நின்று சூரிய அஸ்தமன நிகழ்வை காண மக்கள் வருகை தருகிறார்கள்

இந்தோனேசியா

கரிபீயன் தீவில் உள்ள டொமினிகாவில் உள்ள மெரோ கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் காணப்படும்

டொமினிகா

அழிந்து வரும் கடல் ஆமைகளுக்கான சிறப்பிடமாக இந்த கருப்பு மணல் கொண்ட கடற்கரை பகுதி ஹவாய் தீவில் உள்ளது

ஹவாய்

சீசர் மேன்ரிக் என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட கருப்பு மணல் கொண்ட கடற்கரை பகுதியாகும்.

கேனரி தீவுகள்

அந்நாட்டில் உள்ள ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரையில் உள்ள கருப்பு மணலை காணவே கூட்டமாக மக்கள் வருகை தருகிறார்கள்

ஐஸ்லாந்து

கிரீஸ் நாட்டில் உள்ள பெரிவோலோஸ் கடற்கரை கருப்பு மணல்களால் நிறைந்தது. இது நீர்சறுக்கு விளையாட்டுக்கு புகழ்பெற்ற இடமாகும்

கிரீஸ்

ஜப்பான் நாட்டில் ஷிசுவோகா நகரில் உள்ள மிஹோ - நோ- மட்சுபாரா கடற்கரை கருப்பு மணல் மற்றும் பைன் மரங்களுக்கு புகழ்பெற்றது

ஜப்பான்