இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வரிசைக் கட்டும் படங்கள்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகின்ற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ரசவாதி’ வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படம் வருகின்ற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ள படம் ஸ்டார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெற்றியடைந்த ஆவேஷம் வரும் மே 9-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் 'தி பாய்ஸ்'. இப்படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

ஜிவி பிரகாஷ், இவான முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கள்வன். இந்தப் படம் மே 10 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான திரைப்படம் ரோமியோ.மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது.

NEXT: தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி!