11 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
பூனையுடன் விளையாடுவதாலும், அது செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பதாலும் மன அழுத்தம் குறைகிறது
பூனைகள் வீட்டிற்கு வரும் எலி, பூரான், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை விரட்டி, வீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்
பூனைகள் பாசத்துடன், உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடியவை. எனவே பூனை வளர்ப்பு தனிமை உணர்வை போக்கும்
பூனையுடன் வளரும் குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பூனைகள் சுத்தத்தை விரும்பும் பிராணியாகும். ஈரப்பதம் அல்லது அழுக்கு அதற்கு பிடிக்காது. எனவே சுத்தத்தை விரும்புபவர்கள் பூனைகளை வளர்க்கலாம்
பசி வந்தால் மட்டுமே கத்தும். மற்ற செல்லப்பிராணிகளைப் போல தொந்தரவு செய்யாது