04 August 2023
Author : Umabarkavi
Pic credit - Unsplash
நம்மில் பலருக்கு அடிக்கடி வாயு, வயிற்று வலி என செரிமான பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறோம்
இதற்கு நீங்கள் சாப்பிடும் உணவு தான் காரணம். செரிமான பிரச்னை இல்லாமல் இருக்க என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்
போதுமான திரவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். பழச்சாறுகளை அடிக்கடி பருக வேண்டும்
மது அருந்துவது, புகைப்பிடிப்பது, கூல் டிரிங்ஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
எண்ணெய் மற்றும் துரித உணவுகள், திறந்த வெளியில் விற்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது
சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உடனே படுக்கவும் கூடாது. இதனால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது செரிமானத்தை சீராக வைக்கும்