06 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது நெட்வொர்க். நெட்வொர்க் இல்லையென்றால் பல வேலைகளை செய்ய முடியாது.
உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் மிகவும் மெதுவாக இயங்கினால், இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நெட்வொர்க் வேகமாகவும், சீராகவும் இயங்க வாய்ப்புள்ளது.
மொபைல் போனில் நெட்வொர்க் வேகம் குறைவாக இருக்கும் பட்சத்தில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள். இது உங்கள் போனில் உள்ள கிளிட்ச்களை சுத்தம் செய்து நெட்வொர்கை சீராக்கும்.
மொபைல் போனின் நெட்வொர்க் வேகம் குறைவாக இருந்தால், உங்கள் மொபைல் போன் மற்றும் ஆப்களை அப்டேட் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு சீரான நெட்வொர்க் கிடைக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களில் கேட்ச்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதை சுத்தம் செய்யும்போது நெட்வொர்க் சேவை சீராக இயங்க வாய்ப்புள்ளது.
நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் உங்கள் டேட்டாவை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
நெட்வொர்க் செட்டிங்ஸை ரீ செட் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் தவறாக செட் செய்யப்பட்டிருந்தால் அது சரிசெய்யப்பட்டு நெட்வொர்க் சேவை சீராகும்.