சம்பளத்தை சேமிக்கவே முடியவில்லையா? இதோ டிப்ஸ்

18  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

         சம்பளம்

மாதம் முழுவதும் கடுமையாக உழைத்து அதில் வரும் வருமானத்தை மாதம் முழுக்க செலவு செய்கிறோம். இதில் சேமிப்பு இருக்கிறதா என்பது கேள்விகுறித்தான்

       பணவீக்கம்

ஏற்கனவே உலகளவில் பொருளாதாரம் பெரும்  பிரச்னையாக உள்ளது.  இதனால் பணவீக்கம்,  வேலையின்மை போன்றவை ஏற்படலாம் 

          சேமிப்பு

இதனால், உங்கள் மாத சம்பளத்தில் 10 சதவீதத்தை சேமிப்பது அவசியம். எனவே எப்படி சேமிப்பது என்பதை பார்ப்போம்

         செலவுகள்

முடிந்தளவு தேவையற்ற செலவுகளை தவிருங்கள்.  மாத சம்பளத்தில் நீங்கள் செய்த தேவையில்லாத செலவை பட்டியலிட்டால் அந்த செலவை குறைக்க வழிதெரியும்

      மாத பட்ஜெட்

உங்கள் வருமானத்திற்கு ஏற்ப மாத பட்ஜெட் போட்டு வரவு செலவுகளை செய்தால் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது தெளிவாக தெரியும்

   கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளை தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தாமல் அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதில் ஒரு தொகை சேமிக்க முடியும்

         பொருட்கள்

வீட்டிற்கு தேவையான பொருட்களை மொத்தமாக லிஸ்ட் போட்டு வாங்குகள். இப்படி வாங்குவதன் மூலம் கணிசமான தொகை மிச்சமாகும்