14 DEC 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
தேவைக்கு அதிகமான உணவுகளை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம். அது மீண்டும் சாப்பிடும்போது சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர்
சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதிலுள்ள சத்துக்கள் குறைந்து உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்
எனவே எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை பார்ப்போம்
ஒரு முறை வேகவைத்த முட்டையை மீண்டும் வேகவைத்தோ சூடு செய்தோ சாப்பிடக் கூடாது
சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. சூடுபடுத்தி சாப்பிட்டால் உடலுக்கு தீங்காக மாறலாம்
காளானை சூடுபடுத்தி சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது
கோழிக்கரியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உடலுக்கு மிகவும் கெடு
கீரைகளில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்புள்ளது
பீட்ரூட்டில் நைட்ரேட் நிறைந்துள்ளது. இதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது