22 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
இரத்த சோகை கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது இது ஏற்படுகிறது.
பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் நாளில் அதிக இரத்த இழப்பு ஏற்படும் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும்.
இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பீட்ரூட் சாப்பிடலாம். இது இரத்தத்தை உடலில் ஊற செய்யும்.
கிட்னி பீன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இரத்த சோகை பிரச்சனையை தீர்க்கும்.
வெல்லம் ஒரு இயற்கை இனிப்பு வகையாகும். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து இரத்த சோகையை குணப்படுத்தும்.
மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
ரெட் கேப்சிகத்தில் உள்ள வைட்டமின் சி செல்களில் இருந்து இரும்பு உறிஞ்சுவதற்கு உதவி செய்யும்.