29 JULY 2024
Umabarkavi
Pic credit - Unsplash
குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் சந்திக்கக் கூடிய பிரச்னைகளில் ஒன்று பசியின்மை. இதற்காக குழந்தைகளுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது
பசியின்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் உங்களது உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்
பசியை அதிகரிக்க தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி பார்ப்போம்
சாம்பார், பொரியல் போன்ற உணவுப் பொருட்களில் மிளகாய் சேர்க்கலாம். இது செரிமான அமைப்பை சீராக்கும். அதிக சேர்த்தால் வயிற்றுப் புண வரலாம்
காலையில் பழச்சாறு குடிக்கலாம். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை குடிக்கலாம்
பிரண்டையை ஊறுகாய், துவையலாக சாப்பிடலாம். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே பசியை தூண்டும்
இஞ்சி அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது பசியை தூண்டுவததோடு செரிமானமும் சீராக இருக்கும்