நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

02 September 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

      நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதில் கவனமாக இருக்கவும். அதிக இனிப்புள்ள பழங்கள் சாப்பிடுவதால் ஆபத்து ஏற்படலாம்

           சர்க்கரை

பழங்களில் இயற்கையாக சர்க்கரை இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் இதில் கவனமாக இருக்கவும்

         அத்திப்பழம்

அத்திப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்

            திராட்சை

ஒரு கப் திராட்சையில் 23 கிராம் சர்க்கரை உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம்

          மாம்பழம்

மாம்பழத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஒரு மாம்பழத்தை சுமார் 46 கிராம் சர்க்கரை இருக்கிறது. எனவே, இதை தவிர்க்கவும்

          தர்பூசணி

தர்பூசணியிலும் அதிகளவு சர்க்கரை உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்

     மருத்துவர்கள்

நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் எந்த பழத்தை சாப்பிடலாம் என்பதை உணவியல் நிபுணரிடம் கேட்டறிந்து சாப்பிடுங்கள்