26 June 2024

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்!

நாம் எந்த அளவுக்கு சாப்பாடுகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதே அளவுக்கு பழங்களை எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது.

பழங்களில் நீர்ச்சத்துகள், வைட்டமின்கள் என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதே நேரத்தில் பழங்களில் சர்க்கரை அளவு இருக்கும்

எனவே, குறைவான சர்க்கரை அளவு பழங்களை நீரிழிவு, உடல் பருமன் பிரச்னைகள் இருப்பவர்கள் உட்கொள்ளலாம்

அவகேடோ பழங்களில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட்டு வரலாம்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் குறைந்த சர்க்கரை அளவு உள்ளது. ஒரு கப்பில் சுமார் 7 கிராம் சர்க்கரை அளவு உள்ளது.

கிவி பழத்தில் சுமார் 6 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட்டு வரலாம்

மேலும், ப்ளாக்பெர்ரி, பப்பாளியிலும் குறைவான சர்க்கரை அளவு உள்ளது. இருப்பினும், நீரிழிவு நோய் இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி உங்களுக்கு ஏற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது

NEXT: வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்