20 October 2024
Pic credit - getty
Author : Mukesh
அக்டோபர் 20ஆம் தேதியான இன்று வீரேந்திர சேவாக் தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
டி20 கிரிக்கெட் வருவதற்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 100 ஸ்டிரைக் ரேட்டில் பேட் செய்து உலகையே திகைக்க வைத்தவர் சேவாக்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக டிரிபிள் சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை சேவாக் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 2 டிரிபிள் சதம் அடித்த 4 கிரிக்கெட் வீரர்களில் வீரேந்திர சேவாக் ஒருவர்.
டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் சேவாக் உள்ளார். 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 284 ரன்கள் குவித்தார்.
டெஸ்ட் போட்டியில் மாற்று வீரராக உள்ளே வந்து அதிக கேட்சுகள் (4) எடுத்த வீரர் என்ற சாதனையை சேவாக் படைத்துள்ளார்.
2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 254 ரன்கள் எடுத்திருந்தபோது 47 பவுண்டரிகளை அடித்திருந்தார்.