12 December 2024
Pic credit - GETTY
Author: Mukesh
யுவராஜ் சிங்கின் பிறந்தநாளில் அவர் படைத்த சாதனைகள் பட்டியலை பார்க்கலாம்.
2007 டி20 உலகக் கோப்பையின் போது யுவராஜ் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
2011 ஐசிசி உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் மொத்தமாக 362 ரன்களுடன், 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார். இதன்மூலம், அரவிந்தா டி சில்வா மற்றும் க்ளூசனர் சாதனையை சமன் செய்தார்.
2011 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
2000 அண்டர் 19 உலகக்கோப்பையிலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையிலும் தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்தார்.
2015 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி 16 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது. அன்றைய காலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏல தொகையாகும்.
ஒருநாள் உலகக் கோப்பையில் 300 ப்ளஸ் ரன்களுடன் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் யுவராஜ் சிங் மட்டுமே.