மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டிய எஸ்.ஜே.சூர்யா படங்கள்!

19 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

இயக்குநராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யாவுக்குள் இருந்த நடிப்புத்திறமையை வெளிக்காடிய படம் “இறைவி”. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது

இறைவி

2017ல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் சுடலை என்ற மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்

ஸ்பைடர்

2017ல் அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்தார். இதில் அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது

மெர்சல்

2021ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த மாநாடு படத்தில் அவர் பேசிய வசனங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது

மாநாடு

2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வித்தியாசமான பேராசிரியர் கேரக்டரில் “டான்” படத்தில் இவர் நடித்திருந்தார்

டான்

2023ல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி சிரிப்பலையை ஏற்படுத்தினார்

மார்க் ஆண்டனி

2023ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மீண்டும் நடிப்பில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்த உதவியது

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்