05 AUGUST 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இந்த பச்சை பப்பாளி மிகவும் உதவுகிறது.
பச்சை பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் உள்ளது.
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பச்சை பப்பாளியில் இருப்பதால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் செரிமான செயல்முறையை மேம்படுத்துவதோடு, மூட்டு பிரச்சனைகளையும் சரி செய்யும்.
பப்பாளியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பப்பாளி பழத்தை பச்சையாக சாப்பிடுவதால், சருமத்தில் உள்ள தடிப்புகள், முகப்பரு, தோல் நிறமி போன்ற புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.