13 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
டாய்லெட் சீட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய், இடுப்பு தசைகள் பலவீனம் போன்றவை ஏற்படும்.
கழிப்பறையில் உள்ள ஓவல் இருக்கை மலக்குடலில் அழுத்தம் கொடுக்கும். இது மலக்குடல் வீழ்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.
கழிப்பறையில் நீண்ட நேரம் உட்காருவது இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் கழிப்பறையில் அமருவது உடலில் சோர்வை அதிகரிக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் உட்காரக்கூடாது.
மலச்சிக்கல் 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவர்களை தொடர்பு கொள்வது நல்லது.
கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்தபிறகு, அதிக தண்ணீர் குடிப்பதும், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.