29 May 2024
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது தவிர்க்க முடியாதது. இதனால், மற்றவர்கள் மீது உடல் சோர்வு, தலைவலி போன்றவை இருக்கும். இதனை கட்டுப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம்
இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சிறிது தேன் கலந்து குடிப்பதால் அடி வயிற்று வலி குறையும். உடல் வலியும் குறையும்
அடிவயிற்றில் ஹீட்டிங் பேக் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காட்டன் துணியை முக்கி பிழிந்து அடி வயிற்றில் வைத்துக் கொண்டு படுத்தால் வலி குறையும்
வெந்தையத்தை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு இறுக்கிப்பிடித்தல் குறையலாம். இரவில் இதனை ஊற வைத்து, அந்த தண்ணீரை காலையில் குடிக்கலாம்
நல்லெண்ணையை லேசாக சூடுபடுத்தி கீழ் வயிறு, முதுகில் தடவி மசாஜ் செய்தால் வலி குறையும்
சீரகம் அல்லது ஓமம் தண்ணீர் குடிக்கலாம். இது செரிமான அமைப்பை மேம்படுத்தி, மாதவிடாய் வலியை குறைக்கும்
இதையெல்லாம் தாண்டி, மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்று வலி குறையும்.