இந்தியாவில்  நீண்ட தூரம் பாயும் ஆறுகள் என்னென்ன தெரியுமா? 

25 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இது மொத்தம் 2525 கிமீ தூரத்தில் பாய்கிறது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாய்கிறது.

கங்கை நதி 

இந்தியாவின் இரண்டாவது நீளமான நதி கோதாவரியாகும். மகாராஷ்டிராவில்  தொடங்கி சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக 1464 கி.மீ பயணிக்கிறது.

கோதாவரி ஆறு

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாயும் கிருஷ்ணா நதியின் தூரம்  1400 கி.மீ ஆகும்.

கிருஷ்ணா நதி

உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாயும் யமுனை நதி 1376 கி.மீ பாய்கிறது. 

யமுனை நதி

மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாயும் நர்மதா நதி மேற்கு நோக்கி பாய்கிறது. இது 1312 கி.மீ  தூரம் பாயும் 

நர்மதா நதி

3180 கி.மீ பாயும் சிந்து நதி இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தான் வரை பாயும் நதியாகும். இந்தியாவிற்குள் அதன் தூரம்  1,114 கிலோ மீட்டர்களாகும். 

சிந்து நதி 

பிரம்மபுத்திராவின் நீளம்  2900 கி.மீ. ஆகும்.  இது இந்தியாவில் ஆண் பாலின பெயரை கொண்டதாக கருதப்படும் ஒரே நதியாகும். 

பிரம்மபுத்திரா நதி