தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்கள் லிஸ்ட் இதோ!

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம் ‘பிடி’ சார். இந்தப்படம் வருகின்ற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்துள்ள படம், 'சாமானியன்'. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் வெற்றி நடித்துள்ள படம் ’பகலறியான்’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள் கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிஷன் இணைந்து நடித்துள்ள படம் 'கொஞ்சம் பேசினா என்ன’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விதுஷ், சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள படம் பூமர காத்து. வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டர்போ’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிஜு மேனன் மற்றும் அசிஃப் அலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தலவன்’. படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் மனோஜ் பாஜ்பாயின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பையா ஜி. படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.