27 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று வாய்ப்புண். இவை வந்துவிட்டால் அவ்வளவு எளிதில் போகாது.
குளிர்காலத்தில் வாய் பிரச்சனைகள் அதிகம் தாக்கும். வாய் புண்களும் ஏற்படும். அது அவ்வளவு வேகமாக குறையாது.
வாய் புண்களை குறைப்பதில் உப்பு நீர் நன்றாக வேலை செய்கிறது. உப்பு சேர்த்து பல் துலக்கலாம். தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வாய் புண்கள் குறையும்.
தேன் வாய் புண்களை குறைக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. புண்கள் உள்ள இடங்களில் தேனை தடவினால் விரைவில் கட்டுப்படும்.
பேக்கிங் சோடா வாய் புண்களைக் குறைக்க உதவுகிறது. பேக்கிங் சோடா கலந்த நீரில் வாய் கொப்பளிப்பது பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
வெதுவெதுப்பான நீரில் மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வாயில் போட்டு கொப்பளிக்கவும்.