28 August 2023

தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           தண்ணீர்

உடலுக்கு உணவு என்பது எந்த அளவிற்கு முக்கியோ, அதைவிட அதிக அளவு தண்ணீர் எடுத்துகொள்வது முக்கியம்.

       பிரச்னைகள்

உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம்

 2 லிட்டர் தண்ணீர்

ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்

             பசி

தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுக்குள் வைக்க  உதவும்

       சிறுநீரகம்

தினசரி சரியான அளவில் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகத்தை பாதுகாக்க தினசரி 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்

         தினசரி

சிறுநீரகம் மட்டுமின்றி உடலின் செயல்பாட்டையும் சீராக வைக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

     காலை நேரம்

குறிப்பாக காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது