16 June 2024
சருமத்தை எப்படி பராமரிக்கிறோமோ, அதேபோல தலைமுடியை கவனிப்பது மிகவும் முக்கியம்
தலைமுடியை சரியாக கவனிக்கவில்லை என்றால் முடி உதிர்தல், பொடுகு, முடி உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்
இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளிப்பது முடி ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதை யோசிக்கக்கூட மாட்டோம்
வாரத்திற்கு எத்தனை முறை முடியைக் கழுவ வேண்டும் என்பது அவரவர் முடி வகை மற்றும் அடர்த்தியை பொறுத்தது
எண்ணெய் பசை முடி இருந்தால் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் குளிக்கலாம்.மெல்லிய, நேரான முடி இருந்தால் தலைமுடி அழுக்காக இருக்கும்போது தலைக்கு குளிக்கலாம்
ஒருவருக்கு வறட்சி தன்மை கொண்ட முடியாக இருந்தால் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம்
நாள்தோறும் அதிக நேரம் நீங்கள் வெளியில் இருப்பவராக இருந்தால் உங்களது முடியின் தன்மை மற்றும் அழுக்கு பொறுத்து குளிக்கலாம்