25 May 2024
சரும பராமரிப்பிற்கு அனைவரும் முதலில் செய்வது முகத்தை கழுவது தான். எனவே, ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும் என்பதை பார்ப்போம்
முகத்தை கழுவுவது சருமத்தில் உள்ள வியர்வை, அழுக்கு, எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது.
மேலும், சருமத்தை நீரேற்றமாக வைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால் முகத்தை ஒரு நாளைக்கு பலமுறை கழுவ வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
அதாவது, நார்மல் ஸ்கின் அல்லது ஆயில் ஸ்கின் என்றால் தினசரி 2 முறை முகத்தை கழுவலாம்
அதேபோல, அதிகமாக எண்ணெய் வடிந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தை கழுவலாம். முகப்பரு உள்ளவர்களும் 3 முறை முகத்தை கழுவலாம்
சென்சிடிவ் மற்றும் ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை முகத்தை கழுவலாம். ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ்வாஷை பயன்படுத்த வேண்டும்
மேக் கப் போட்டு வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு கட்டாயம் மேக்கப்பை அகற்ற வேண்டும். முறையாக மேக்கப் க்ளென்சர் கொண்டு அகற்றி, பேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்