05 June 2024
மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான நேரம் வரை தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமான வைக்கும்
சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற உடல்நலச் பிரச்னைகள் ஏற்படும். இதனால், தூக்கத்தின் நேரம் என்பது மிகவும் முக்கியம்
இரவு 10 முதல் 6 மணி வரை தூங்குவது சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இருக்கு நவீன காலத்தில் இது சாத்தியமில்லை என்றாலும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்கவும்
ஆனால், காலையில் எவ்வளவு சீக்கிரம் எழ முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுவது மிகவும் நல்லது. இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவும்
எனவே, ஒரு நாளைக்கு ஆறு முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். மாணவர்கள் இரவில் தாமதாகப் படிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
மாறாக இரவில் சீக்கிரமாக தூங்கச் சென்று, காலையில் எழுந்து படிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது
இரவில் தூங்கச் செல்வதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாஸ்ட்புட், எண்ணெய் சேர்ந்த உணவுகள் போன்றவற்றை இரவில் தவிர்க்க வேண்டும்.