16 JULY 2024

தங்க நகையா? கவரிங்க நகையா? உண்மையை கண்டுபிடிக்க டிப்ஸ்

Umabarkavi

Pic credit - Unsplash

தங்கம்

இந்தியாவில் ஏழை, நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது

தரம்

தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் ஏதோ ஒரு கடைக்கு சென்று வாங்குகின்றனர். அதன் தரம் பற்றி யாரும் பார்ப்பதில்லை

கவனிக்கவும்

பார்ப்பதற்கு தங்கம் போன்று இருக்கும் எல்லா நகைகளும் தங்கமாக இருக்காது.  தங்க நகைகளை வாங்கும்போது எப்படி கவனித்து வாங்குவது என்பதை பார்ப்போம்

BIS முத்திரை

BIS முத்திரை பதிந்து இருக்கும். 22 கேரட் தங்கமா, 24 கேரட் தங்கமா என்ற முத்திரை பதிந்து இருக்கும். கவரிங் நகையில் இது இருக்காது

HUID எண்

புதிதாக தங்க நகை வாங்கும்போது HUID எண் கொடுக்கப்படுகிறது. BIS Care செயலியில் அந்த நம்பரை செக் செய்தால் நகையை பற்றிய விவரங்கள் வந்துவிடும்

நைட்ரிக் ஆசிட்

தங்கத்தை ஒரு கல்லில் உரசி அதில் நைட்ரிக் ஆசிட்டை ஊற்றலாம். தங்கமாக இருந்தால் கரையாது. கவரிங்காக இருந்தால் கரைந்துவிடும்

செய்கூலி

நகை வாங்கும்போது அதற்கான பில்லினை சரி பார்க்கவும். அந்த பில்லில் செய்கூலி, சேதாரம் எவ்வளவு என்பதை கவனிக்கவும்