07 August 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
திராட்சையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டசி சி, கே, ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த திராட்சையை சுத்தமாக கழுவி சாப்பிடுவது உடலுக்கு நல்லது
திராட்சை பூச்சி தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் பழத்தின் மீது அடிக்கப்படுகிறது
இதை சரியாக கழுவாமல் சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை, செரிமான பிரச்னைகள் ஏற்படுகிறது
இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க திராட்சையை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தும் செய்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் திராட்சையை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து சிறது எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும்
இதை 5 நிமிடம் அப்படியே விட்டு விட்டு நன்றாக கழுவி சாப்பிடவும். இப்படி திராட்சையை கழுவி சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கும்