கவனம் சிதறாமல் தியானம் செய்வது எப்படி?

31 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

         தியானம்

நாள்தோறும் காலையில் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

   கவனச்சிதறல்

தியானம் செய்யும்போது பலருக்கும் கவனச்சிதறல் ஏற்படுகிறது. குறிப்பாக தியானம் செய்யும் ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்னை ஏற்படும்

               இடம்

தியானம் செய்யும்போது முதலில் நீங்கள் சுத்தமான, அமைதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்

         வாசனை

வாசனை பொருட்களை பயன்படுத்தலாம். உதாரணமாக நறுமணம் தரும் பத்திகளை ஏற்றி வைத்து தியானம் செய்தால் கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கலாம்

           கம்பளி 

கம்பளி துணியில் அல்லது பாயில் உட்கார்ந்து தியானத்தை துவங்கலாம். இது கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கும்

            உணவு

வெறும் வயிற்றில் தியானம் செய்ய வேண்டும். இது கவனச் சிதறலை குறைக்கும்

  ஆழ்ந்த தியானம்

இந்த வழிமுறைகளை பின்பற்றி தியானம் செய்யும்போது உடனடியாக ஆழ்ந்த தியானத்திற்கு செல்ல முடியும்