நல்ல பூண்டை எப்படி கண்டுபிடிப்பது?

23 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

பூண்டு 

பூண்டு பொதுவாக நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு உணவுப்பொருளாகும். இதனை தினசரி எடுத்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்

நல்ல பூண்டு

ஆனால் இன்று பூண்டிலும் கலப்படம் வந்துவிட்டது. நல்ல பூண்டை எப்படி சரிப்பார்த்து வாங்குவது என்பதை பார்க்கலாம்

வெள்ளை நிறம் 

பூண்டு எப்போதும் முழு வெள்ளை நிறத்தில் இருக்காது கோதுமை நிறத்தில் இருக்கும். வெள்ளையாக இருந்தால் அதனை உரித்துப்பார்க்க வேண்டும்.

ஒரே வடிவம்

எல்லா பூண்டும் ஒரே வடிவத்தில் இருக்காது. அப்படி இருந்தால் நிச்சயம் போலி பூண்டாக இருக்க வாய்ப்புள்ளது.

பூண்டு தோல்

நல்ல பூண்டின் தோல் மெல்லியதாக இருக்கும், எளிதில் உரித்து விடலாம். போலி பூண்டின் தோல் சற்று தடிமனாக இருக்கும்

பரிசோதனை 

ஒரு கப் தண்ணீரில் பூண்டு போட்டு அது மூழ்கினால் நல்ல பூண்டு, அப்படியே மிதந்தால் அது போலி பூண்டு

பூண்டு வாசனை 

பூண்டின் வாசனை மிகவும் காட்டமாக இருக்கும். போலி பூண்டில் எந்த விதமான வாசனையும் வராது.