09 JULY 2024
Pic credit - Unsplash
சமைக்கும்போது பாத்திரங்களில் அடி பிடிப்பது என்பது வழக்கமானது. இந்த கறைகளை ஈஸியான முறையில் அகற்றலாம்‘
1 கப் வெதுவெதுப்பான நீரில் சிறிது அளவு உப்பு, 1 எலுமிச்சை சாற்றை கலந்து கொண்டு அந்த கலவையை கறை படிந்த பாத்திரத்தில் ஊற்றி ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கறை இருக்காது
1 கப் தண்ணீர், 4-5 தேக்கரண்டி வினிகரை கலந்து கறை படிந்த பாத்திரத்தில் ஊற்றி ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கறை இருக்காது
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 ஒரு எலுமிச்சை சாற்று கலந்து கறை படிந்த பாத்திரத்தில் ஊற்றி ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கறை இருக்காது
அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு எலுமிச்சை சாறு சேர்த்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து விடவும்
தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை சேர்த்து ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதியை சுரண்டவும்
பின் அடுப்பை அணைத்து தண்ணீரை கீழே கொட்டிவிடவும். பாத்திரம் சூடாக இருக்கும்போதே கம்பி நார் கொண்டு அடிபிடித்த பகுதியை தேய்த்தால் கறை நீங்கிவிடும்