07 July 2024
Pic Credit: Unsplash
முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி12, ஈ, கே, தாதுக்கள், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
இப்படி எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த முட்டைகள் வாங்கி சில நாட்களிலே கெட்டு போகும். முட்டை கெட்டுப்போகாமல் இருக்க சில வழிகளை பார்ப்போம்
முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு கழுவி எடுத்து கொள்ளவும். பின் இந்த முட்டைகளை ஒரு காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்
பின்பு, ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்து, முட்டை மீது எண்ணெய் தடவிக் கொள்ளவும்
இதன்பின் முட்டை ட்ரேயில் இந்த முட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். முட்டைகளின் கூர்மையான பகுதி கீழ் பகுதியில் இருக்குமாறு அடுக்கி வைக்கவும்
இதை வெளியில் வைத்தால் 12 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்
ஆனாலும் முட்டைகளை வாரத்திற்கு ஒருமுறை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்துவது உடலுக்கு நல்லது