உங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொள்வது எப்படி?

23 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மைகளை அளிப்பதோடு, மூளையையும் கூர்மையாக வைக்க உதவுகிறது.

வல்லாரை

மூளையின் செயல்பாட்டை வல்லாரை கீரை அதிகரிப்பதோடு நரம்பு மண்டலத்தில் உள்ள கோளாறுகளையும் சரி செய்ய உதவுகிறது.

ஆளிவிதை

அக்ரூட் பருப்புகள், பாதாம். சியா விதைகள், ஆளிவிதை போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

அரிசி

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் பேரீச்சம் பழம். பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

புதிய மொழி

புதிய மொழியை கற்பதன் மூலம் ஒரு நபரை மனதளவில் சுறுசுறுப்பாகப் பழக்கப்படுத்துவதன் மூலம் நினைவாற்றலை வலுவாக வைத்திருக்க உதவும்.

நடைப்பயிற்சி

இயற்கையுடன் தொடர்பில் இருக்கும் போது புதிய விஷயங்களை கற்க உரமாக இருக்கும் ‘நியூரோப்ளாஸ்ட்’ நிலையை மூளை அடைகிறது. இது நடைப்பயிற்சியில் சாத்தியம்.