30 May 2024
நாம் எந்தளவுக்கு முகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமோ, அதை போல பாதங்களையும் பரமாரிப்பது அவசியம். எனவே, பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்
குளிக்கும்போது பாதம், குதிகாலில் உள்ள அழுக்குகளை தேய்த்து கழுவவும்
தண்ணீரில் உப்பு கலந்து பாதங்களை அதில் 15 நிமிடடம் வைத்து, ப்ரஷ் பயன்படுத்தி தேய்த்து கழுவினால் பாத வெடிப்புகள் வராமல் தடுக்கும்
வெதுவெதுப்பான நீரில் சோடா, எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடம் காலை வைத்து கழுவினால் கருமை நீங்கிப் பொலிவு பெறும்
இரவில் தூங்கும்போது வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவ வேண்டும். தூங்கும்முன் பாதங்களில் பாதாம் ஆயில் தடவினால் பாத வெடிப்புகள் நீங்கும்
தினமும் ஃபுட் கிரீம் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி வந்தால் பாதங்களின் வறட்சயை போக்கும்
மேற்கண்டவற்றை தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால் பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும்