19  NOV  2024

கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கிய பராமரிப்பு..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஹார்மோன்

கருவுற்ற பெண்களுக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும், குறிப்பாக ஹார்மோன் பிரச்சனையால் சரும ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்

முகப்பரு

இதனால் முகப்பரு, தேமல், பிக்மெண்டேஷன், கழுத்தில் கருப்பு திட்டுக்கள் போன்ற பிரச்சனைகள் வரும்

ஊட்டச்சத்து

கர்ப்பக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் நீரேற்ற உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம்

தூக்கம்

சரும ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம், நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 முதல் 10 மணி நேர உறக்கம் இருக்க வேண்டும்

நீர்ச்சத்து

நீர்ச்சத்து குறையாமல் இருக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

சோப்

முகப்பரு மற்றும் தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு சோப் இல்லாத க்ளென்சரை பயன்படுத்தலாம்.

வெயில் 

நேரடி வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் பிக்மெண்டேஷன் ஏற்படக்கூடும், எனவே uv கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம்