26 May 2024
முதலில் கோதுமை மாவை எடுத்து அதற்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
பின்னர், உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோல் நீக்கி நன்றாக மசிக்கவும்.
பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
அடுத்து, பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவில் கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து தேய்த்து கொள்ளவும்
பின்பு, அதில் உருளைக்கிழங்கு மசாலைவை வைத்து மெலிதாக தேய்க்க வேண்டும்
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேவைப்பட்டால் நெய் தடவி பராத்தாவை போட்டு வெக வைக்கவும்
பராத்தா ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நெய் தடவி சுட்டு எடுத்தால் சுவையான ஆலு பராத்தா ரெடி..