20 JULY 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பல்வேறு கோயில்களிலும், பல்வேறு திருவிழாக்களிலும் மாவிளக்கு போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது அம்மனுக்கு பிடித்த நைவேத்தியமாகும்.
பச்சரிசி மாவு - கால் கிலோ வெல்லம் - 100 கி (சலித்துக்கொள்ள வேண்டும்) ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன் சுக்குப்பொடி - கால் டீஸ்பூன் பச்சை கற்பூரம் - தேவைப்பட்டால் சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் வெல்லம் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைய வேண்டும்
சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன் அதனுடன் நெய் சேர்த்து எத்தனை உருண்டை வேண்டுமோ அதற்கேற்ப பிடிக்க வேண்டும்.
அந்த உருண்டையின் நடுவில் அழுத்தி விளக்கு போன்ற வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அவ்வளவு தான் மாவிளக்கு ரெடி.
அந்த இடத்தில் நெய் ஊற்றி திரி போட்டு கடவுளை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும்.
எப்போதும் ஒற்றை மாவிளக்கு போடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.