21 May 2024

மொறு மொறு சமோசா செய்வது எப்படி?

ஒரு கின்னத்தில் மைதா, உப்பு நெய், தண்ணீர் சேர்த்து பிசைத்து ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும்  பச்சை மிளகாய்,  வெங்காயம், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

பின்னர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்க வேண்டும்

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டையாக்கி, பூரி போன்று வட்டமாக தேய்த்து இரண்டாக வெட்டி ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிதளவு வைக்கவும்

பின்னர், சமோசா வடிவில் செய்து தட்டில் தனியாக எடுத்து வைக்கவும். இறுதியில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய்யை ஊற்றவும்

எண்ணெய் நன்றாக சூடானதும், சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான சமோசா ரெடி.

இந்த சமோசாவை மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் ஆக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

NEXT: உலர் பழங்கனை தினமும் சாப்பிட்டால் என்னாகும்?