20 JULY 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
மழைக்காலம் தொடங்க உள்ளதால் இருமல், சளி, தலைவலி, தொண்டை வலி, காய்ச்சல், உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இதனை துளசி ரசம் மூலம் தடுக்கலாம். வீட்டில் நாம் செய்யும் ரசத்துடன் தேவையான பொருட்களை சேர்த்து மிகவும் எளிதாக செய்யலாம்.
துளசி இலை, மிளகு, புளி, கடுகு, எண்ணெய், உப்பு, துவரம் பருப்பு, கொத்தமல்லி (தனியா), சீரகம் ஆகிய அனைத்தும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்து தேவையான அளவு எடுக்கவும்
மிளகு, சீரகம், கொத்தமல்லி, துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவி நீரில் கரைத்த தேவையான அளவு புளிக் கரைசலுடன் சேர்த்து கொதிக்க விடவும்
கொதித்தவுடன் துளசி இலைகளை அரைத்து இதில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும். இதில் தாளித்த கடுகை சேர்க்கவும். இதனை எளிதாக செய்யலாம்
அவ்வளவு தான் துளசி ரசம் சுவையுடன் தயாராகி விடும். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.