ஆபீஸ்  மீட்டிங்கில்  ஈஸியாக சமாளிப்பது எப்படி?

30 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஆபீஸ் மீட்டிங் செல்வதற்கு முன் முழு அளவில் என்ன பேசப்போகிறோம், என்ன தரவுகள் உள்ளது என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

தயாராவது

நம்மை பற்றிய விமர்சனம், உடன்படா கருத்து ஆகியவை பற்றி சொல்லும்போது எக்காரணம் கொண்டு நிதானம் இழக்காதீர்கள்

அமைதியாக இருப்பது

மீட்டிங்கில் மற்றவர்கள் பேசுவதை பொறுமையாக கேளுங்கள். குறுக்கே பேசி ஆக்கப்பூர்வமான உரையாடலை தடுக்க வேண்டாம்

பொறுமை

தவறான புரிதல்கள் ஏற்பட்டால் உடனடியாக அதனை மீட்டிங்கில் தெளிவுப்படுத்த வேண்டும். இது கருத்து மோதலை தவிர்க்க உதவும்

தெளிவு

மீட்டிங்கில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமே தவிர, அதுதொடர்பான தேவையில்லாத உரையாடல்களை வளர்க்காதீர்கள்

கவனம்

நேரம் மேலாண்மை மிக முக்கியம். தேவைப்படும் விஷயங்களை மட்டுமே மீட்டிங்கில் பேச அனுமதியுங்கள் 

நேரம்

ஆபீஸ் மீட்டிங்கில் தேவைப்படும் பட்சத்தில் மற்றவர்களின் வழிகாட்டுதலை கேட்க ஒருபோது தயக்கம் வேண்டாம் 

வழிகாட்டுதல்