28 SEP 2024
Pic credit - Getty
Author Name : umabarkavi
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது முதல் மூன்று மாதம், கடைசி மூன்று மாதத்தில் இருக்கலாம்
எனவே கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் சோர்வை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம்
கர்ப்பிணிகள் தினமும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்கவும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
கர்ப்பிணிகள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் 20 நிமிடம் மெதுவாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
கர்ப்பிணிகள் இரவில் நன்றாக தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும்
சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவை எடுத்து கொள்ளவும்
முக்கியமாக சரியான நேரத்தில் உங்கள் காலை, மதியம், இரவு உணவுகளை சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்