19 JULY 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
ஆடி மாசம் என்பதால் பொதுவாக தமிழ்நாட்டில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று
இதனால் சாலைகளில் செல்லும் போது தூசுகள், நச்சுகள் போன்றவை காற்று மாசுபாட்டின் காரணிகள் நம் சருமத்தை எளிதாக பாதிக்கிறது
இத்தகைய சரும பாதிப்பை தடுக்க நாம் வைட்டமின் சி அடங்கிய உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி உணவுகளால் உடலில் உண்டாகும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ப்ரீ- ரேடிக்கல்களை அழிக்கிறது. இதனால் சரும பாதிப்பு தடுக்கப்படுகிறது
அதேபோல் சருமத்தை சுற்றி பாதுகாப்பு அரண் போல வைட்டமின் சி செயல்படுவதால் நச்சுக்கள் பாதிப்பு குறைகிறது
மேலும் சூரியனின் புற ஊதா கதிர்களை தடுக்க சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம். அதற்கு முன் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவது சிறந்தது
சருமம் மிருதுவாக இருக்க நீரேற்றம் என்பது அவசியம். எனவே அடிக்கடி தண்ணீர் குடிப்பதோடு சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்