01 May 2024

உடல் சூட்டை தணிக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

வெப்ப அலையால் உடல் அதிக சூடாகவே இருக்கும். இதனால், உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.

எனவே, கோடை காலத்தில் உடல் சூட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி பார்க்கலாம்

காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். இது  வெயிலில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

கற்றாழை சாருடன் சிறிது தேன், தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கோடையில் உடல் குளிர்ச்சியுடன் இருக்க இளநீர் குடிக்கலாம். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.

Next: கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?