02 August 2023

உணவில் காரம் அதிகமாகிவிட்டால் இதை பண்ணுங்க

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

காரமான உணவு

உணவு சமைக்கும்போது சில நேரங்களில் காரம் அதிகமாகிவிடும். இதனால், நாம் சமைத்த உணவே சாப்பிடவே முடியாது

           டிப்ஸ்

எனவே உணவுகளில் அதிகம் காரம் ஆகிவிட்டால் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

எலுமிச்சை சாறு

நாம் சமைக்கும் உணவின் தன்மையை பொறுத்து காரம் அதிகம் உள்ள உணவில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம்

     சர்க்கரை

காரம் அதிகம் உள்ள உணவில் சர்க்கரையும் சேர்க்கலாம். அதிக சர்க்கரை சேர்த்தால் இனிப்பு சுவையை கொடுக்கும். எனவே, சிறிதளவு சேர்க்கவும்

         நெய்

நெய் சேர்க்கும்போது காரத்தை குறைப்பதுடன் உணவின் ருசியையும் அதிகரிக்கும். காரத்திற்காக மட்டுமில்லாமல் வழக்கமாக  நெய் சேர்ப்பது நல்லது

பால் பொருட்கள்

காரம் அதிகமாகிவிட்டால் பால் பொருட்களை சேர்க்கலாம். க்ரீம், சிறிதளவு பால், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்த்தால் காரம் குறையும்

பிரச்னைகள்

வழக்கமாகவே உணவில் காரம் அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். காரம் அதிகம் சேர்ப்பதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்