12 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
இன்றைய நவீன காலத்தில் மன அழுத்தம் பலருக்கும் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தால் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்
எனவே மன அழுத்தத்தை விரட்ட முயற்சிப்பது மிகவும் நல்லது. அது எப்படி என்று பார்ப்போம்
வீடு, அலுவலகம் என 4 சுவர்களுக்குள் மன அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது நல்லது
கடற்கரை, பூங்கா அல்லது இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று அங்கு நேரத்தை கழிப்பது நல்லது
மன அழுத்தத்தின்போது சோகமான பாடலை கேட்பதை தவிருங்கள். மன அழுத்தம் ஏற்படும்போது மகிழ்ச்சியான பாடல்களை கேளுங்கள்.
மன அழுத்தத்தை உணரும்போது சமையலறைக்கு சென்று உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைக்கலாம். இது உங்களை சந்தோஷப்படுத்தும்
மன அழுத்தம் ஏற்பட்டால் கணினி, மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவது தவிருங்கள். இது தலைவலி, கழுத்து வலியை ஏற்படுத்தும்