23 June 2024

வாய் துர்நாற்றம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க!

நம்முடைய உடை, வெளி அழகை எந்த அளவிற்கு கவனிக்கின்றோமோ அந்த  அளவிற்கு நம்முடைய வாய் சுகாதாரத்தை கவனிக்க வேண்டும்

வாய் துர்நாற்றம் என்பது அனைவருக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கும்

வாய் உலர்ந்து போனாலும் துர்நாற்றம் வீசும்.  இதனால் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

எதாவது சாப்பிட்டால் உடனே வாய்க் கொப்பளிக்கும் பழகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காஃபி, டீ குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

புகைப்பழக்கம், மது, கார்பனேட் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்தால் வாய் துர்நாற்றம் வராமல் இருக்கும்

சர்க்கரை நோய், சொத்தைப் பல், குறட்டை, அஜீரணப் பிரச்னைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

எனவே, வாய், பல் தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய மருத்துவரை அணுகி தீர்வு காண்பது மிகவும் நல்லது.

NEXT: சர்க்கரையை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?