வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க செம்ம டிப்ஸ்

03 July 2024

Pic Credit: Unsplash

வெங்காயம்

வெங்காயம் இல்லாத குழம்பு, பொறியல் வகைகளும் அவ்வளவாக சுவையாக இருக்காது. எனவே, குழம்பு முதல் தயிர் வரை வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறோம்

கெட்டுப்போகுதா?

சமையலுக்கு முக்கியமாக இருக்கும் வெங்காயம் வாங்கி சில நாட்களிலே கெட்டுபோகலாம். எனவே, வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

காற்றோட்டம்

வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க காற்றோட்டம் அவசியம். எனவே அவற்றை ஒருபோதும் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டாம்

குளிர்ச்சியான சூழல்

வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். குளிர் மற்றும் ஈரமான சூழலில் அவை கெட்டுப்போக அல்லது பூஞ்சை தாக்கத்திற்கு வழிவகுக்கும்

பச்சை அல்லது நறுக்கிய வெங்காயத்தை காற்று புகாத பாத்திரத்தில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது 10 நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்

மூடிய பாத்திரம்

உருளைக்கிழங்கு

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஒன்றாகச் சேமிக்க வேண்டாம். அது வெங்காயம் கெட்டுப்போவதை துரிதப்படுத்தும்

தட்வெப்பம்

வெங்காயத்தை 12 முதல் 17 டிகிரி தட்பவெப்பத்தில் சுத்தமான இருண்ட  மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்