12 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
குப்பையில் வீணாக போடும் எலுமிச்சை தோலை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்
எலுமிச்சை தோல் இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே, இதனை பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்
காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படும் கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்ய எலுமிச்சை தோலை பயன்படுத்திக் கொள்ளலாம்
வீட்டில் பாத்திரம் கழுவும் சிங்க், முகம் கழுவும் சிங்க் போன்றவற்றை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்தால் பளபளவென ஜொலிக்கும்
டீ, காபி போடும் பாத்திரங்களில் கரை பிடித்து இருந்தால் டிஷ்வாஷ் லிக்விட் உடன் சேர்த்து தேய்த்தால் கரை எளிதில் நீங்கிவிடும்
காப்பர் பாத்திரங்களில் ஏற்படும் கரைகளை எலுமிச்சை தோல் கொண்டு சுத்தம் செய்யலாம்
சோப், பேக்கிங் சோடாவை காட்டிலும் எலுமிச்சை தோல் நல்ல பலன் அளிக்கும். எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து சுத்தம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்